sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கெடு  நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

/

கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கெடு  நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கெடு  நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 

கால்வாய்கள் மீதுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கெடு  நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை 


ADDED : அக் 03, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி நகரில், மழைநீர் வடிகால் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்கள், வரும், 15ம் தேதிக்குள் கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகராட்சியில், கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், நகராட்சி கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி கமிஷனர் கணேசன் பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதால், தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்களை உடனடியாக துார்வாரி சுத்தம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உள்ள முக்கிய மழைநீர் வடிகால் கால்வாய்களை துார்வார வேண்டும்.

குறிப்பாக கடைவீதி பகுதிகளில் துார்வாரி சுத்தம் செய்ய வேண்டியுள்ளதால், வியாபாரிகள் கடைகளுக்கு முன்புறம் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய்கள் மீது அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை வரும், 15ம் தேதிக்குள் அவர்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும். நகராட்சியின் துாய்மை பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அவ்வாறு, அகற்றப்படாத பட்சத்தில் நகராட்சியால் அகற்றப்படுவதுடன், அதற்கான செலவினத்தொகை சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் வசூலிக்கப்படும். கழிவுநீர் கால்வாய்களில் எக்காரணம் கொண்டும் கழிவுகளை போடக்கூடாது. அவ்வாறு போடுவது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மற்றும் வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு முன்பாக உள்ள மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதற்கு, நகராட்சி சுகாதார ஆய்வாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கழிவுகளை அகற்ற பணியாளர்களை ஈடுபடுத்தும் போது தக்க முன்னெச்சரிக்கை, பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிக்காக சுகாதார ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுகாதார அலுவலர் சுந்தர்ராஜன் - 70104 04921, சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார் - 94430 95762, சந்தோஷ்குமார் - 93611 93915, கார்த்திக்கேயன் - 93426 59020, மணிகண்டன் - 96773 47601 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us