/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
/
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ADDED : அக் 12, 2025 11:08 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் மலை ரயிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் எடுத்து செல்லக்கூடாது என்பதற்காக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில், டீ கப்புகள் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் தொட்டி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லிட்டர் வாட்டர் பாட்டில் மற்றும் அதற்கு குறைவான வாட்டர் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. டீ கப்புகளுக்கு பதிலாக கண்ணாடி டம்ளர்கள், எவர்சில்வர் டம்ளர்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இந்த தடை வரவேற்கதக்கது. ஆனால் அதனை மலை ரயிலில் செல்லும் பயணிகளுக்கு மட்டும் அமல்படுத்தி இருக்கலாம். இந்த தடையால் மெமு ரயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்வோரும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை செல்வோரும், சிறப்பு ரயில்களில் தென் மாவட்டங்களுக்கு செல்வோரும் பாதிக்கப்படுவார்கள்.
ரயில் பயணத்தின் போது கண்ணாடி வாட்டர் பாட்டீல்களை அதிக விலை கொடுத்து பயணிகள் வாங்க வேண்டும். ரயிலில் பயணிக்கும் போது பசித்தால் கூட டீ குடிக்க முடியாது, என்றார்.----