/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து குறைவு: விலையும் சரிந்ததால் அதிருப்தி
/
வாழைத்தார் வரத்து குறைவு: விலையும் சரிந்ததால் அதிருப்தி
வாழைத்தார் வரத்து குறைவு: விலையும் சரிந்ததால் அதிருப்தி
வாழைத்தார் வரத்து குறைவு: விலையும் சரிந்ததால் அதிருப்தி
ADDED : நவ 05, 2025 08:11 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலையும் குறைந்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும், தனிப்பயிரிராகவும் விவசாயிகள் வாழை சாகுபடி செய்கின்றனர். கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு, வியாபாரிகள் வருகை அதிகம் இருப்பதால், வாழைத்தாருக்கு நல்ல விலை கிடைக்கிறது.
விவசாயிகள் அறுவடை செய்யும் வாழைத்தார்களை தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். நேற்று, செவ்வாழை கிலோ - 65, நேந்திரன் --- 25, ரஸ்தாளி --- 40, பூவன் --- 35, கதளி --- 30, சாம்பிராணி வகை --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது நேந்திரன் கிலோவுக்கு, 12 ரூபாயும், பூவன் 5 ரூபாயும் விலை குறைந்துள்ளது. வரத்து குறைந்த நிலையில், விலையும் சரிந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை காட்டிலும், வாழைத்தார் வரத்து குறைந்து, விலையும் சரிந்துள்ளது. இந்த வாரமும் வெளி மாவட்ட வரத்து இல்லை. மொத்தமாக, 300 வாழைத்தார்கள் மட்டுமே வரத்து இருந்தது. வரும் நாட்களில் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.

