/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை
/
காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விற்பனை
ADDED : ஜூலை 14, 2025 08:14 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து, விற்பனை விறு, விறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில், வாரந்தோறும் ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில், வாழைத்தார் ஏலம் நடைபெறுகிறது. உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்படுகின்றன.
விசேஷ நாட்களில், பழங்களின் தேவை அதிகம் உள்ளதால், இவற்றின் வரத்தும் அதிகரிப்பதுடன், விலையும் கிடு...கிடு... வென உயர்ந்து காணப்படுவது வழக்கம். நேற்று நடந்த சந்தைக்கு வாழைத்தார் விற்பனை விறு, விறுப்பாக நடந்தது.
வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த சில மாதங்களாக தொடர் மழையால், வாழைத்தார் அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், உள்ளூர் வரத்து குறைந்து வெளியூர் வரத்து மட்டுமே இருந்தது.
நேற்று சந்தைக்கு உள்ளூர், வெளியூர் வரத்து என, 2,000 வாழைத்தார் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ, பூவம், 33 ரூபாய், கற்பூர வள்ளி, 38, மோரிஸ், 32, நேந்திரம், 50, செவ்வாழை, 58 என்ற விலைக்கு விற்பனையானது.
இந்த மாதத்தின் கடைசி இரண்டு நாள் முகூர்த்த நாள், ஆடி மாதம் துவங்குவதால், தேவை அதிகரிப்பதுடன், விலையிலும் மாற்றம் ஏற்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.