/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கதேசத்தினர் பதுங்கல் கோவையில் கணக்கெடுப்பு
/
வங்கதேசத்தினர் பதுங்கல் கோவையில் கணக்கெடுப்பு
ADDED : மே 17, 2025 12:54 AM
கோவை:கோவை புறநகரில் உள்ள, துடியலுார் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த லோதிப் அலி, 29, செரீப், 35 ஆகியோரை சில நாட்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கம் வந்து, அங்கிருந்து தமிழகத்துக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கண்காணிப்பையும், தேடுதலையும் முடுக்க, கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
அந்தந்த ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுத்து, ஆவணங்களை சரிபார்க்க, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர் தங்கியிருக்கும் அறைகளில் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ''கோவையின் எல்லை பகுதிகளான கருமத்தம்பட்டி, நீலாம்பூர், சோமனுார் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம். மாநகரில் ராக்கிபாளையம், பீளமேடு, சின்னியம்பாளையம், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்சாலைகள் அதிகமுள்ள இடங்களில், வடமாநிலத்தவர் உள்ளனர்.
''அங்கு சோதனையை தீவிரப்படுத்தி உள்ளோம். மாநகர பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். போலீஸ் ஸ்டேஷன் வாரியாக கணக்கெடுத்து, பட்டியல் சமர்ப்பிக்க அறிவுறுத்திஉள்ளேன். சந்தேகம் உள்ள நபர்களின் மொபைல் போன், ஆவணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன,'' என்றார்.