/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்;46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது -
/
8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்;46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது -
8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்;46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது -
8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்;46 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது -
ADDED : செப் 02, 2024 01:59 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பகுதியில், இந்த ஆண்டு இதுவரை, 8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. 12 கஞ்சா வியாபாரிகள் உட்பட, 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க, புறநகர் போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களில் இருந்து கோவையில் தங்கி வேலை பார்க்கும் நபர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து, போதைப்பொருள் பயன்படுத்துகின்றனரா என, கண்டறிந்து, அவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
விழிப்புணர்வு
மேலும், பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை உள்ளதா என, கண்டறிய போலீசார் உடன் இணைந்து வாட்ஸ்ஆப் குரூப் துவக்கப்பட்டு, அதில் தகவல்கள் பரிமாறிக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர, அவ்வப்போது பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் அதை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில்,' கோவை மாவட்ட போலீசார் கோவை மாநகர போலீசார் மற்றும் தமிழ்நாடு ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் உடன் இணைந்து கஞ்சா வியாபாரிகளை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை தீவிர படுத்தி உள்ளோம்.
குண்டர் சட்டம்
தடாகம் பகுதியில் 11 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு, 10 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். அவர்களிடம் இனிமேல் கஞ்சா வியாபாரம் உள்ளிட்ட சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபட மாட்டோம் என, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. மீறுவோர் ஒரு ஆண்டு சிறையில் அடைக்கப்படுவர். அவர்களில், 8 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலானவர்கள் ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பின்புலத்தை விசாரித்து, அவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் நடப்பாண்டு இதுவரை, 12 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட, 46 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட பாலமலை, பசுமணி, பசுமணி புதூர் உள்ள பகுதிகளில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதே போல தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஆனைகட்டி மலை கிராமங்களில் கஞ்சா செடி வளர்த்த நபர்கள் கைது செய்யப்பட்டனர்.