/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வங்கி ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்
/
வங்கி ஓய்வூதியர் சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : அக் 07, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; பாரத ஸ்டேட் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின், 40வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம், கோவையில் நடந்தது.
வங்கியின் தலைமை பொது மேலாளர் விவேகானந்தன் சவுபே, பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா, சென்னை வட்டார வளர்ச்சி அதிகாரி சஞ்சீவ் குமார், துணை பொது மேலாளர் அருண் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ஓய்வூதியர் சங்கம் சார்பாக, நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவை ஹெல்ப்பிங் ஹார்ட்ஸ் அமைப்புக்கு, வாஷிங்மெஷின் மற்றும் பிரிட்ஜ் வழங்கப்பட்டது.
கோவை ஸ்ரீ அன்னை கரங்கள் அசோசியேஷனுக்கு, கம்ப்யூட்டர் பிரிண்டர் வழங்கப்பட்டது. வங்கியின் பல்வேறு தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.