sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பி.ஏ.பி. வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை

/

 பி.ஏ.பி. வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை

 பி.ஏ.பி. வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை

 பி.ஏ.பி. வாய்க்கால் துார்வார விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஜன 22, 2026 05:19 AM

Google News

ADDED : ஜன 22, 2026 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -:

தண்ணீர் திறப்பதற்கு முன், பி.ஏ.பி., மெயின், கிளை வாய்க்கால்களை துார் வாரி சுத்தப்படுத்த வேண்டும் என, மங்கலம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பி.ஏ.பி. பல்லடம் விரிவாக்கப்பகுதிகளான, மங்கலம், பூமலுார், இச்சிப்பட்டி கிளை வாய்க்கால் பகுதிகளில், ஒரு மடை விட்டு ஒருமடை, ஐந்தாயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற வேண்டும்.

முதலாவது மண்டல பாசனத்துக்காக, வரும், 24ம் தேதி பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஆனால், பொதுப்பணித்துறையினர், இதுவரை, மெயின், கிளை வாய்க்கால்களை சுத்தம் செய்யவில்லை.

தண்ணீர் திறப்புக்கு இன்னும் இரண்டு நாளே உள்ளதால், துரித நடவடிக்கை எடுத்து, வாய்க்கால்களை துார்வாரவேண்டும். மாணிக்கா புரம் பகுதியிலிருந்து வேலம்பாளையம் வரை, மெயின் வாய்க்காலை துார்வார வேண்டும்.

இப்பகுதிகளில் தற்போது, நிலத்தடி நீர் குறைந்துள்ளது. விவசாயிகள், வாய்க்கால் பாசனத்தையே நம்பியுள்ளனர்.

மங்கலம் பாசன சபைக்கு உட்பட்ட சின்னக்காளிபாளையம், இடுவாய், அட்டையம்பாளையம், எம்.செட்டிபாளையம், மங்கலம், சின்னாண்டிபாளையம் வரை உள்ள அனைத்து கிளை கால்வாய்களையும் சுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான், கடைமடை வரை தண்ணீர் வந்து சேரும்.

இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us