/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாலிபர் கொலை வழக்கில் 'பார்' தொழிலாளிக்கு 'ஆயுள்'
/
வாலிபர் கொலை வழக்கில் 'பார்' தொழிலாளிக்கு 'ஆயுள்'
ADDED : அக் 16, 2025 05:48 AM
கோவை: வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பார் தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில், மீமிசெல் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார்,36. கோவையில் தங்கியிருந்து, தடாகம் பகுதியிலுள்ள டாஸ்மாக் மது பாரில் வேலை செய்தார். அப்போது, லாலி ரோடு பகுதியை சேர்ந்த சுரேஷ்,25, என்பவர் சிவகுமாரிடம் பிராந்தி வாங்கி கொண்டு, இரண்டு தினங்கள் கழித்து பணம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார்.
2016, ஜூன் 15ல், சிவகுமார் பணத்தை கேட்ட போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சிவகுமார் ஆத்திரமடைந்து சுரேசை கட்டையால் அடித்து, கொலை செய்துவிட்டு தப்பினார். ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரித்து, சிவகுமாரை கைது செய்தனர்.
அவர் மீது, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட சிவகுமாருக்கு ஆயுள்சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மோகன் பிரபு ஆஜரானார்.