UPDATED : நவ 23, 2026 05:04 PM
ADDED : நவ 23, 2026 05:04 PM

அ நிறம் | அளவு
கோவை: அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், மாணவிகளுக்கு 11 விடுதிகளும், மாணவர்களுக்கு 7 விடுதிகளும் உள்ளன.
இவற்றில், 1,400 மாணவியர், 1,100 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். கல்லுாரி ஆய்வகம், வகுப்பறைகளுக்கும், விடுதியும் சற்று தொலைவில் உள்ள சூழலில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிரமப்படும் நிலை உள்ளது.
இதற்கு தீர்வாக பேட்டரி கார் வாங்கப்பட்டுள்ளது. கல்லுாரி முதல்வர் புருஷோத்தமன் கூறுகையில், ‘‘ பேட்டரிகார் எம்.எஸ். அக்வாசப் டெக்ஸ்மோ நிறுவன உதவியுடன் வாங்கியுள்ளோம். மாற்றுத்திறன், உடல்நிலை சரியில்லாத மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். காலை, மதிய உணவு, மாலை என வந்து செல்ல மாணவிகளுக்கு இது எளிதாக உள்ளது. மேலும் ஒரு பேட்டரி கார் வாங்கப்படும்’’ என்றார்.
