தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'சைபர் தாக்குதலுக்கு தயாராக இருக்கணும்'

 'சைபர் தாக்குதலுக்கு தயாராக இருக்கணும்'

 'சைபர் தாக்குதலுக்கு தயாராக இருக்கணும்'


ADDED : ஜூலை 11, 2026 07:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 07:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கோவை கிளை மண்டலம் சார்பில் சைபர் பாதுகாப்பு மாநாடு நடந்தது.

சைபர் தாக்குதல்களுக்கு எதிராக நிறுவனங்கள் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள் கலந்துரையாடினர்.

மாநாட்டை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அவசரகால பதிலளிப்பு குழு தலைமை இயக்குநர் சஞ்சய் பால் துவக்கி வைத்தார்.

அவர் பேசுகையில், சைபர் பாதுகாப்பு தொழில் நிறுவனங்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஏ.ஐ. தாக்கம், உலக அரசியல் சூழ்நிலை காரணமாக சைபர் தாக்குதல் பெரும் சிக்கலாக மாறி வருகிறது.

சைபர் தாக்குதல்களுக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதை நிர்வாகம், மனிதவளம், செயல்முறைகள் ஆகிய அனைத்திலும் ஒருங்கிணைத்து கையாள வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us