ADDED : அக் 01, 2026 07:32 AM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி வரும் 6ம் தேதி காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை நடக்கிறது.
தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் பற்றி பயிற்சி அளிக்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு வேளாண் பல்கலை பூச்சியியல் துறையில் ரூ.590 செலுத்தி சேரலாம். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். 0422- 6611214 என்ற எண்ணில் பேசி விவரங்கள் அறியலாம்.
