ADDED : செப் 06, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி இன்று 9 முதல் 5 வரை நடக்கிறது.
இந்த பயிற்சியில் தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
