/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பதற்கு முன்பாக... மாத்தி யோசிங்க! பணிமனையை இணைத்து ஒரே இடத்தில் கட்டலாம்
/
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பதற்கு முன்பாக... மாத்தி யோசிங்க! பணிமனையை இணைத்து ஒரே இடத்தில் கட்டலாம்
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பதற்கு முன்பாக... மாத்தி யோசிங்க! பணிமனையை இணைத்து ஒரே இடத்தில் கட்டலாம்
உக்கடம் பஸ் ஸ்டாண்ட் புதுப்பிப்பதற்கு முன்பாக... மாத்தி யோசிங்க! பணிமனையை இணைத்து ஒரே இடத்தில் கட்டலாம்
ADDED : டிச 06, 2024 05:34 AM

கோவை: உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டுடன், அரசு போக்குவரத்து கழக பணிமனையை இணைத்து, ஒரே வளாகமாக, விசாலமாக புதுப்பித்துக் கட்ட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து டவுன் பஸ்கள் மட்டுமின்றி, பழனி, பொள்ளாச்சி, உடுமலை மற்றும் பாலக்காடு செல்வதற்கான பஸ்கள் இயக்கப்படுகின்றன. உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டியபோது, பஸ் ஸ்டாண்ட் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்டு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 'உக்கடம் பஸ் ஸ்டாண்ட் வளாகம் நவீன முறையில் சீரமைக்கப்படும்' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கு மாநகராட்சி சார்பில், ரூ.21.55 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது. வரும், 18ம் தேதி மாலை, 4:00 மணிக்கு 'டெண்டர்' திறக்கப்படுகிறது.
தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடத்தின் பரப்பு சுருங்கி விட்டதால், இரு பிரிவாக பிரித்து கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. பஸ் ஸ்டாண்ட்டுகளை பிரித்து இரு இடங்களில் அமைத்தால், பயணிகளுக்கு சிரமம் ஏற்படும். லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு, ரோட்டின் குறுக்கும் நெடுக்குமாகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். ஒவ்வொரு ரோட்டுக்கும் பஸ்கள் திரும்பிச் செல்லும்போது, உக்கடம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும்.
மீன் மார்க்கெட் அருகே உள்ள காலியிடத்தில், 'மெட்ரோ ரயில்' திட்டத்தில், உக்கடம் ஸ்டேஷன் அமைக்க, 'சென்னை மெட்ரோ ரயில்' நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது; மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் இவ்விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்டேஷன் அமையும் பட்சத்தில், தற்போது கட்டப்படும் பஸ் ஸ்டாண்ட்டை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும். பெருந்தொகை செலவிட்டு புதிதாக கட்டி விட்டு இடிப்பது, மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு சமம்.
இதற்கு தீர்வாக, உக்கடத்தில் செயல்படும் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மீதமுள்ள இடத்தை காலி செய்து விட்டு, ஒரே வளாகமாக பஸ் ஸ்டாண்ட்டை விசாலமாக கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்திருக்கிறது.
அருகாமையில் சுங்கம் பகுதியில் செயல்படும் பணிமனையில், உக்கடம் கிளையில் நிறுத்த வேண்டிய பஸ்களை நிறுத்துவதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யலாம். தற்போது பஸ் ஸ்டாண்ட் செயல்படும் இடத்தோடு பணிமனை இடத்தை இணைத்தால் விசாலமான பரப்பு கிடைக்கும். அங்கு, ஒரே வளாகத்தில், அனைத்து நகரங்களுக்கும் செல்வதற்கான பஸ்களை தனித்தனி 'ரேக்'களில் நிறுத்துவதற்கு, பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வகையில், பஸ் ஸ்டாண்ட்டை புதுப்பித்து நவீன முறையில் கட்ட வேண்டும் என, பயணிகள் விரும்புகின்றனர்.