தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தனியாக இருப்பது தனிமை அல்ல

தனியாக இருப்பது தனிமை அல்ல

தனியாக இருப்பது தனிமை அல்ல


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் பெண்கள் தனியாக வெளியில் செல்வது என்பது அரிதான விஷயம். வீட்டை விட்டு வெளியே குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் துணையுடன்தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

இன்றைய தலைமுறை பெண்கள் கல்வி, வேலை, பொருளாதார சுதந்திரம் என தனக்கான அடையாளத்தை உருவாக்கி, தங்களுக்காகவும் பிரத்யேகமாக நேரம் ஒதுக்க தொடங்கி விட்டனர்.

அதன் ஒரு பகுதியாக, 'சோலோ டேட்' என்ற பெயரில் இளம் பெண்கள் தனியாக வெளியே சென்று தங்களுக்கு பிடித்த விஷயங்களை ரசிக்கும் பழக்கம் தற்போது டிரெண்டாகி வருகிறது.

கஃபேயில் காபி குடிப்பது, தனியாக படம் பார்ப்பது, புத்தக கடை அல்லது ஷாப்பிங் செல்வது, பார்க் போவது என மனதுக்கு பிடித்ததை தனியாகவே செய்து மகிழ்கின்றனர்.

துணைக்கு யாரும் வர காத்திருக்காமல், கிடைக்கும் நேரத்தை தனக்காக செலவிடுவதுதான் இதன் சிறப்பு. சிலர் இந்த தருணங்களை புகைப்படம், வீடியோவாக வலைதளங்களிலும் பகிர்கின்றனர்.

இட்ஸ் மை டைம்! என அவர்கள் தலைப்பு போடுவதில் பிரதிபலிக்கிறது அந்த உள்ளங்களின் துள்ளல்.

தனியாக இருப்பது தனிமை அல்ல. நம்முடன் நாமே நேரம் செலவிடுவதும் ஒரு கொண்டாட்டம்தான். பிறர் நம்மை நேசிக்க வேண்டும் என்று காத்திருப்பதை விட, நம்மை நாமே நேசிப்பதுதான் மகிழ்ச்சி.

சுபலக்ஷ்மி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us