/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., வேட்பாளரை முடிவு செய்யும் 'பென்'
/
தி.மு.க., வேட்பாளரை முடிவு செய்யும் 'பென்'
ADDED : பிப் 04, 2024 03:47 AM

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை மற்றும் கள ஆய்வு பணிகளில், 'ஐபேக்' நிறுவனம் ஈடுபட்டு வந்தது.
வரும் லோக்சபா தேர்தலில் அதிக, 'சீட்' வெல்வதற்காக, களப்பணியாற்ற, 'பென்' என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது.
கட்சியின் ஐ.டி.,விங்கில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தனியார் கல்லுாரியில் அடிக்கடி அரசியல், தேர்தல் சர்வே செய்யும் பேராசிரியர் தலைமையிலான குழுவினர், பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஊடக சீனியர்கள் சிலர், உளவுத்துறை அனுபவசாலிகள் சிலர் என, பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து, 'பென்' அமைப்பு இயங்குகிறது.
புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில், 'பென்' அமைப்பு மூலம் கள ஆய்வு முடிந்துள்ளது. போட்டியிட தகுதியான நபர், அவர்களின் செல்வாக்கு, பணபலம், தி.மு.க., ஆதரவு, எதிர்ப்பு மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட மாற்று கட்சியினரின் பலம், பலவீனம் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் தி.மு.க., என்ற பெயர் திரும்ப திரும்ப பேசப்பட வேண்டும் என்பதற்காக, பல்வேறு விளம்பர உத்திகளை செயல்படுத்த உள்ளனர்.
பென் அமைப்பு மூலம் தொகுதிக்கு மூன்று பேர் என உத்தேச வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது
-நமது நிருபர்-.