/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணத்துக்கடவுக்கு சிறந்த ஒன்றியம் விருது
/
கிணத்துக்கடவுக்கு சிறந்த ஒன்றியம் விருது
ADDED : ஜன 28, 2025 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு, சிறந்த ஒன்றியத்துக்கான விருதை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், கலைஞர் கனவு திட்டம், வீடுகள் பழுதுபார்ப்பு உள்ளிட்ட பல திட்டங்களை விரைவாகவும், சிறந்த முறையிலும் செயல்படுத்தியதற்காக, சிறந்த ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டது.
கோவையில் நடந்த குடியரசு தின விழாவில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு, விருது வழங்கி பாராட்டினார். கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினகுமார் விருதினை பெற்றுக்கொண்டார்.