விபத்தில் வெடிக்காத சிலிண்டர்: பாரத் பெட்ரோலியம் அறிமுகம்
விபத்தில் வெடிக்காத சிலிண்டர்: பாரத் பெட்ரோலியம் அறிமுகம்
UPDATED : ஆக 01, 2026 05:49 PM
ADDED : ஆக 01, 2026 05:31 PM
கோவை: பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் 'பாரத் காஸ் லைட் ஜிப்' என்ற புதிய சேவையை கோவையில் அறிமுகம் செய்துள்ளது.
இப்புதிய சேவை வாயிலாக, வாடிக்கையாளர்கள் உடனடியாக புதிய காஸ் இணைப்பை பெறமுடியும். பதிவு செய்த நான்கு மணி நேரத்திற்குள் சிலிண்டர் வினியோகிக்கப்படும்.
''நாட்டில் முதற்கட்டமாக 30 நகரங்களில் இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 15க்குள் மேலும் 100 நகரங்களில் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் கோவை, சென்னையில் மட்டும் துவங்கியுள்ளது.
இந்த இலகுரக காம்போசிட் சிலிண்டர் எடை குறைவானது. கடினமான பிளாஸ்டிக் மெட்டீரியல் கொண்டது. தீ விபத்து சமயத்தில் வெடிக்காது; எரிந்து உருகிவிடும்.
சிலிண்டரில் எல்.பி.ஜி. அளவை வெளிப்படையாக காணும் வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன. காஸ் இணைப்பு கட்டணம் ரூ.4,973. சிலிண்டர் விலை ரூ.1,787,'' என்கின்றனர், கோவை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரிகள்.
