/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதி கலாபவன் பள்ளிக்கு பரிசு வழங்கி கவுரவிப்பு
/
பாரதி கலாபவன் பள்ளிக்கு பரிசு வழங்கி கவுரவிப்பு
ADDED : நவ 18, 2025 03:33 AM

பொள்ளாச்சி: கிணத்துக்கடவு பாரதி கலா பவன் பள்ளி, உலக அளவிலான 'எடுக்வாலிட்டி' நிறுவனத்தின் பரிசை வென்றது.
பள்ளியில் பெற்றோர் இணைப்பை புதிய வடிவில் மேம்படுத்தி, மாணவர்களின் நடத்தை வழிமுறைகளை வலுப்படுத்தி, அனைத்து குழந்தைகளையும் உள்ளடக்கும் பாதுகாப்பான சீரிய கல்வி சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த மாற்றங்கள் தற்போது பள்ளியில் நிரந்த நடைமுறைகளாக அமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், பெற்றோர் சமூகத்துக்கு நீண்ட நாள் பயனளிக்கும் அமைப்புகள் உருவாகியுள்ளன.
இந்த பள்ளியின் தரமான கல்விக்கான அர்ப்பணிப்பையும், 'எடுக்வாலிட்டி' திட்டத்துடன் கொண்டுள்ள ஆழமான ஒத்துழைப்பையும் வெளிப்படுத்துகிறது. இத்திட்டமானது, 'ஆப்பர்ச்சுனிட்டி இன்டர்நேஷனல்' அமைப்பின் முழுமையான மூன்றாண்டு பள்ளி மேம்பாட்டு முயற்சியில், குறைந்த கட்டணத்தில் வழங்கும் பள்ளிகளுக்கு வலுவூட்டவும், கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் பயிற்சிகள் வழங்கப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
'எடுக்வாலிட்டி' சார்பாக டாக்டர் சித்ரா, ேஷாபா ஆகியோர், பள்ளி தாளாளர் வடிவேலுவிடம், சான்றிதழ், காசோலைகளை வழங்கினர். பள்ளி முதல்வர் ரங்கநாயகி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னுசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.

