/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை கூடைப்பந்து பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
/
பாரதியார் பல்கலை கூடைப்பந்து பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
பாரதியார் பல்கலை கூடைப்பந்து பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
பாரதியார் பல்கலை கூடைப்பந்து பி.எஸ்.ஜி. கல்லுாரி அணி முதலிடம்
ADDED : டிச 24, 2025 05:16 AM

கோவை: பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. 'நாக்-அவுட்' போட்டிகளை அடுத்து அரையிறுதி போட்டி, 'லீக்' முறையில் நடந்தது.
முதல் போட்டியில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணி, 84-34 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. தொடர்ந்து, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 80-74 என்ற புள்ளிகளில் கே.பி.ஆர்., கல்லுாரியையும், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் அணி, 77-50 என்ற புள்ளிகளில் கே.பி.ஆர்., கல்லுாரி அணியையும் வென்றன.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 60-28 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியையும், கே.பி.ஆர்., கல்லுாரி அணி, 57-11 என்ற புள்ளிகளில் பாரதியார் பல்கலை அணியையும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 69-44 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியையும் வென்றன.
நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, பாரதியார் பல்கலை ஆகியன முதல் நான்கு இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார்.

