/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை கால்பந்து போட்டி; வெற்றி வாகை சூடியது நிர்மலா கல்லுாரி

ADDED : டிச 04, 2024 10:27 PM

கோவை; பாரதியார் பல்கலை கால் பந்து போட்டியில், நிர்மலா மகளிர் கல்லுாரி முதலிடம் பிடித்தது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி, பல்கலை மைதானத்தில் நடந்தது. பல்வேறு சுற்றுக்களை அடுத்து வெற்றியாளர்களை தேர்வு செய்வதற்காக, மூன்று அணிகள் 'லீக்' அடிப்படையில் மோதின.
அதன்படி, நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 7-2 என்ற கோல் கணக்கில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. தொடர்ந்து, பாரதியார் பல்கலை அணி, 2-0 என்ற கோல் கணக்கில், மைக்கேல் ஜாப் கல்லுாரி அணியை வீழ்த்தியது.
நிர்மலா மகளிர் கல்லுாரி அணி, 8-0 என்ற கோல் கணக்கில் மைக்கேல் ஜாப் கல்லுாரி அணியை வென்றது. நிறைவில், நிர்மலா மகளிர் கல்லுாரி அணி முதலிடத்தையும், பாரதியார் பல்கலை அணி இரண்டாம் இடத்தையும், மைக்கேல் ஜாப் கல்லுாரி அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றிபெற்ற அணிகளுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.