/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முழு நேர, பகுதி நேர பி.எச்டி.,: பாரதியார் பல்கலை அழைப்பு
/
முழு நேர, பகுதி நேர பி.எச்டி.,: பாரதியார் பல்கலை அழைப்பு
முழு நேர, பகுதி நேர பி.எச்டி.,: பாரதியார் பல்கலை அழைப்பு
முழு நேர, பகுதி நேர பி.எச்டி.,: பாரதியார் பல்கலை அழைப்பு
ADDED : ஜூலை 09, 2025 10:24 PM
கோவை; பி.எச்டி., படிப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, பாரதியார் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
பாரதியார் பல்கலையின் பல்வேறு துறைகள், பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட கல்லுாரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களில் முழு நேர, பகுதி நேர பி.எச்டி., படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இப்படிப்புகளில் சேர, பல்கலை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, www.b-u.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும், 25ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பி.எச்டி., ஆராய்ச்சி படிப்புக்கு ரூ.1,000, எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 'பதிவாளர், பாரதியார் பல்கலை, கோவை' என்ற முகவரிக்கு வரும், 25ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சேர வேண்டும். பொது நுழைவுத்தேர்வு, நேர்காணல், அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, பல்கலை தெரிவித்துள்ளது.