/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை கபடி போட்டிகள்; வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்
/
பாரதியார் பல்கலை கபடி போட்டிகள்; வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்
பாரதியார் பல்கலை கபடி போட்டிகள்; வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்
பாரதியார் பல்கலை கபடி போட்டிகள்; வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்
ADDED : செப் 26, 2024 11:50 PM

கோவை : ஏ.ஜே.கே., கல்லுாரியில் நடந்துவரும் கபடி போட்டியில் வெற்றி முனைப்புடன் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகின்றனர்.
ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே(சி-மண்டலம்) ஆண்களுக்கான கபடி போட்டி நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது. இதில், 22 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், கல்லுாரி முதல்வர் ராஜூ போட்டிகளை துவக்கிவைத்தார்.
'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 38-24 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து, டெக்ஸ்சிட்டி கல்லுாரி, 30-8 என்ற புள்ளி கணக்கில் சி.பி.எம்., கல்லுாரியை வென்றது.
கமலம் கல்லுாரி அணி, 32-13 என்ற புள்ளி கணக்கில் அங்கப்பா கல்லுாரி அணியையும், ஸ்ரீ ராமு கல்லுாரி, 35-8 என்ற புள்ளி கணக்கில் வித்யாசாகர் கல்லுாரி அணியையும், பொள்ளாச்சி எஸ்.டி.சி., கல்லுாரி அணி, 35-29 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியையும் வென்றது.
உடுமலை அரசு கலைக் கல்லுாரி அணி, 29-16 என்ற புள்ளி கணக்கில் பொள்ளாச்சி அரசு கலைக் கல்லுாரி அணியையும் வென்றது. தொடர்ந்து, காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. இன்று காலிறுதி, அரையிறுதி, இறுதிப்போட்டிகள் இடம்பெறுகின்றன. ஏ.ஜே.கே., கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் இளையராஜா உள்ளிட்டோர் போட்டிகளை நடத்திவருகின்றனர்.