/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை 'டேக்வாண்டோ'- கோப்பை வென்றது நிர்மலா கல்லுாரி
/
பாரதியார் பல்கலை 'டேக்வாண்டோ'- கோப்பை வென்றது நிர்மலா கல்லுாரி
பாரதியார் பல்கலை 'டேக்வாண்டோ'- கோப்பை வென்றது நிர்மலா கல்லுாரி
பாரதியார் பல்கலை 'டேக்வாண்டோ'- கோப்பை வென்றது நிர்மலா கல்லுாரி
ADDED : நவ 04, 2024 10:48 PM

கோவை; பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான 'டேக்வாண்டோ' போட்டியில், பெண்களுக்கான போட்டியில், நிர்மலா கல்லுாரி அணி ஒட்டுமொத்த கோப்பையை வென்றது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 'டேக்வாண்டோ' போட்டி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கொரிய தற்காப்பு கலையான இந்த 'டேக்வாண்டோ' போட்டி, 54 கிலோ, 58, 63, 68, 74, 80, 87 கிலோ எடைக்கு உட்பட்ட, 87 கிலோ எடைக்கும் அதிகமான என எட்டு பிரிவுகளில் நடந்தது.
ஆண்களுக்கான போட்டியில், 60 பேர் பங்கேற்றனர். அதிக வெற்றிகளை குவித்த பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி ஒட்டுமொத்த கோப்பையை வென்றது. இரண்டாம் இடத்தை கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி அணி வென்றது.
பெண்களுக்கான போட்டியிலும், 60 பேர் பங்கேற்றனர். இதில், ஒட்டுமொத்த கோப்பையை நிர்மலா மகளிர் கல்லுாரி அணி வென்றது. இரண்டாம் இடத்தை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியும், மூன்றாம் இடத்தை கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியும் பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை இயக்குனர் (பொ) ராஜேஸ்வரன், கொங்குநாடு கல்லுாரி செயலாளர் வாசுகி ஆகியோர் பரிசு வழங்கினர்.
வீரர், வீராங்கனைகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்ட விதம் பார்வையாளர்களிடம் கரகோஷத்தை எழுப்பியது.