/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை மகளிர் கபடி பி.கே.ஆர்., கல்லுாரி முதலிடம்
/
பாரதியார் பல்கலை மகளிர் கபடி பி.கே.ஆர்., கல்லுாரி முதலிடம்
பாரதியார் பல்கலை மகளிர் கபடி பி.கே.ஆர்., கல்லுாரி முதலிடம்
பாரதியார் பல்கலை மகளிர் கபடி பி.கே.ஆர்., கல்லுாரி முதலிடம்
ADDED : அக் 21, 2024 06:26 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில் நடந்த, பாரதியார் பல்கலை மகளிர் கபடி போட்டியில், பி.கே.ஆர்., கல்லுாரி அணி முதலிடம் பெற்றது.
பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், பாரதியார் பல்கலை மகளிர் கபடி போட்டி நடந்தது. கல்லுாரி முதல்வர் மாணிக்கச்செழியன், கல்லுாரியின் நிர்வாக மேலாளர் ரகுநாதன், உடற்கல்வித்துறை இயக்குனர் அசோக்குமார், போட்டிகளை துவக்கி வைத்தனர்.
முதல் நாள், 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடைபெற்றன. இரண்டாம் நாள் போட்டியை, என்.ஜி.எம்., கல்லுாரியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் ராஜ்குமார், கல்லுாரி பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகள் போட்டியிட்டன.
முதல் போட்டியில், பி.கே.ஆர்., கல்லுாரி அணி, 48 - 17 என்ற புள்ளி கணக்கில் கே.எஸ்.ஜி., அணியை வென்றது. இரண்டாவது லீக் போட்டியில் ரத்தினம் கல்லுாரி அணி, 29 - 26 என்ற புள்ளி கணக்கில் என்.ஜி.எம்., கல்லுாரி அணியை வென்றது.
மூன்றாவது போட்டியில் பி.கே.ஆர்., கல்லுாரி அணி, 50 - 55 என்ற புள்ளி கணக்கில் ரத்தினம் கல்லுாரி அணியை வென்றது. அடுத்த லீக் போட்டியில், என்.ஜி.எம்., கல்லுாரி அணி, 45 - 22 என்ற புள்ளி கணக்கில், கே.எஸ்.ஜி., அணியை வென்றது.
ரத்தினம் கல்லுாரி அணி, 33 - 22 என்ற புள்ளி கணக்கில், கே.எஸ்.ஜி., அணியை வென்றது. அடுத்த போட்டியில் பி.கே.ஆர்., கல்லுாரி அணி, 32 - 27 என்ற புள்ளி கணக்கில் என்.ஜி.எம்., கல்லுாரி அணியை வென்றது.
இப்போட்டியில், பி.கே.ஆர்., கல்லுாரி அணி முதலிடமும், ரத்தினம் கல்லுாரி இரண்டாமிடமும், என்.ஜி.எம்., கல்லுாரி அணி மூன்றாமிடமும், கே.எஸ்.ஜி., கல்லுாரி அணி நான்காமிடத்தையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

