தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ‘இ–ஆபிஸ்’ நடைமுறைக்கு மாற பாரதியார் பல்கலை தயக்கம் ஏன்?

‘இ–ஆபிஸ்’ நடைமுறைக்கு மாற பாரதியார் பல்கலை தயக்கம் ஏன்?

‘இ–ஆபிஸ்’ நடைமுறைக்கு மாற பாரதியார் பல்கலை தயக்கம் ஏன்?


ADDED : செப் 17, 2026 12:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 12:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடவள்ளி: ‘இ–ஆபிஸ்’ முறையை செயல்படுத்த, உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஆக. 15 ம் தேதிக்குள், இதை நடைமுறைப்படுத்த பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பாரதியார் பல்கலையில் இதுவரை இதற்கான பணிகள் துவங்கவில்லை. இதனால், முக்கிய கோப்புகள் கிடப்பில் போடுவது தொடர்கிறது. 

பல்கலை ஆசிரியர்களுக்கு, கல்வித்தகுதி, ஆராய்ச்சிகளின் அடிப்படையில், பதவி உயர்வு வழங்கப்படும். பல ஆண்டுகளாக இப்பதவி உயர்வு இல்லாததால், பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்கம் போராட்டம் நடத்தியது. அதையடுத்து டிச. மாதம் அறிவிப்பு வெளியானது. 95 பேர் பதவி உயர்வுக்கான ஆவணங்கள் சமர்பித்துள்ளனர். ஆனால், இதுவரை யாருக்கும் பதவி உயர்வு தரவில்லை. சென்னை, திருவள்ளூர் பல்கலைகளில், அறிவிப்பு வெளியான இரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலையில் மட்டும் இந்த பணி கிடப்பில் உள்ளதாக, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பாரதியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவர் வசந்த்,‘‘ இ–ஆபிஸ் நடைமுறைக்கு வந்தால், கோப்புகளில் கையெழுத்திட லஞ்சம் பெறுவது, சிபாரிசு செய்வது ஆகியவை ஒழியும். ஆனால். அதற்கான வேலையே தொடங்கவில்லை. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களை, இடமாறுதல் செய்ய வேண்டும், என்ர உத்தரவும் இங்கே அமலாகவில்லை’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us