ADDED : செப் 15, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பெட்டதாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது.
யுனைடெட் ரவுண்ட் டேபிள், 196 சார்பில் இரண்டு வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் ரவுண்ட் டேபிள் பொறுப்பாளர்கள் கிருஷ்ணன், அருண், பள்ளி தலைமை ஆசிரியர் ராதா, எஸ்.எம்.சி., தலைவர் சசிகலா, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
