மதிப்பெண் கல்வி முறைக்கு எதிராக சைக்கிள் பிரசார பயணம் ஏற்பாடு
மதிப்பெண் கல்வி முறைக்கு எதிராக சைக்கிள் பிரசார பயணம் ஏற்பாடு
ADDED : செப் 17, 2026 01:11 PM
ஆர்.எஸ்.புரம்: கல்வி முறையில் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு சைக்கிள் பிரசாரம் நடக்கிறது.
கல்வியாளர் ஜவகர் நேசன் ‘குழந்தைகள் - இளைஞர்கள் வாழ்க்கை முக்கியம்’ என்ற தலைப்பில் பலரை ஒருங்கிணைத்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளார். செப். 26ல் குமரியில் துவங்கி, அக். 16ல் சென்னையில் முடிகிறது.
இதற்காக ஆர்.எஸ்.புரத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஜவகர் நேசன் பேசுகையில்,‘‘தற்போதைய கல்வி முறை மனப்பாடம் மற்றும் நுழைவு தேர்வுகளை மையமாக கொண்டிருப்பதால், மாணவர்களுக்கு மன அழுத்தமும், கல்வியில் ஏற்றத்தாழ்வும் அதிகரிக்கிறது. செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இக்காலத்தில், மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்க கூடாது” என்றாார்.
பிரசார பயணம் குறித்த கூடுதல் விவரங்களை childrenandyouthlivesmatter.in இணையதளத்தில் பெறலாம்.
