/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிட்டி' நிறுவனம் சார்பில் 28ல் 'பிக் பேங்' நிகழ்ச்சி
/
'சிட்டி' நிறுவனம் சார்பில் 28ல் 'பிக் பேங்' நிகழ்ச்சி
'சிட்டி' நிறுவனம் சார்பில் 28ல் 'பிக் பேங்' நிகழ்ச்சி
'சிட்டி' நிறுவனம் சார்பில் 28ல் 'பிக் பேங்' நிகழ்ச்சி
ADDED : செப் 25, 2025 12:35 AM

கோவை: 'சிட்டி' நிறுவனத்தின் சார்பில், 'பிக் பேங்' எனும் நிகழ்ச்சி, கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், 28ல் நடக்கிறது. மாணவர்களின் முன்னிலையில் பல்வேறு அறிவியல் சோதனைகள், செய்முறைகள் செய்து காட்டப்பட உள்ளன.
'சிட்டி' நிறுவனத்தின் நிறுவனர் பிரேம் ஆனந்த் கூறியதாவது:
புத்தகத்தில் படிக்கும் தகவல்களை சோதனை செய்து காட்டும்போது, அதிகளவு தகவல்களை வழங்க முடியும். வேதியியல் மீதான ஆர்வத்தை துாண்டும் வகையில், 'எலிபேண்ட் டூத் பேஸ்ட்' தயாரித்தல், திரவ நைட்ரஜன் மூலம் தர்பூசணியை வெடிக்கச் செய்தல் உள்ளிட்ட செயல்முறைகள் செய்து காட்டப்படும்.
இயற்பியல் மீது ஆர்வத்தை துாண்ட, காற்றழுத்த பீரங்கி, சுழல் புகை உந்தி ஆகிய செய்முறை களும் நிகழ்ச்சியில் செய்து காட்டப்படும். ஏரோநாட்டிக்கல் மீதான ஆர்வத்தை துாண்டும் வகையில், மாதிரி வானுர்தி கண்காட்சி, செயற்கை நுண்ணறிவு ரோபோ காட்சியும் நடக்கிறது. காலை 9 முதல் இந்நிகழ்ச்சி நடக்கிறது. விபரங்களுக்கு 98842 22368 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.