தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பைக் திருடியவர் கைது

 பைக் திருடியவர் கைது

 பைக் திருடியவர் கைது


ADDED : ஜூன் 22, 2026 10:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2026 10:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: நாமக்கல், பரமத்தி வேலூரை சேர்ந்தவர் கார்வேந்தன், 19. இவர், கிணத்துக்கடவில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கிறார். இவர், தினமும் கல்லூரிக்கு பைக்கில் சென்று வருகிறார்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி, சொந்த ஊர் சென்று, 21ம் தேதி கிணத்துக்கடவுக்கு வந்த போது, பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் அருகாமையில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பைக்கை திருடியது கிணத்துக்கடவு கோவிந்தாபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 19, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து திருடப்பட்ட வாகனத்தை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us