/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு
/
பில்லுார் நீர்மட்டம் 4 அடி உயர்வு
ADDED : அக் 13, 2024 10:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம் : பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், ஒரே நாளில் நான்கு அடிக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான குந்தாவில், 37 மில்லி மீட்டரும், கெத்தையில், 44 மி.மீ., பரளியில், 28 மி.மீ., அவலாஞ்சியில், 15 மி.மீ., பில்லூர் அணைப் பகுதியில், 21 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வினாடிக்கு, 919 கன அடி நீர் வரத்து உள்ளது.
இதனால், நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில், நான்கு அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. மொத்தமுள்ள 100 அடி கொள்ளளவில், அணையின் நீர் மட்டம் நேற்று, 91.50 அடியாக இருந்தது.