ஆகாய தாமரையால் திணறுகிறது பல்லுயிர் பெருக்க மண்டலம்
ஆகாய தாமரையால் திணறுகிறது பல்லுயிர் பெருக்க மண்டலம்
ADDED : ஆக 17, 2026 05:21 AM

உக்கடம்: பெரியகுளம் 337 ஏக்கர் பரப்பும், 20 அடி ஆழமும் கொண்டது. நொய்யல் வாய்க்கால்களும் செல்வசிந்தாமணி குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீருமே இதன் நீர் ஆதாரங்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளக்கரை நவீன பொழுதுபோக்கு மையமாக மாறியுள்ளது. நடைபயிற்சிக்கும், சைக்கிளில் செல்லவும் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கு குளக்கரையில், 30 அடி உயரத்தில் கயிற்றில் தொங்கியபடி செல்லும் 'ஜிப் லைன் ஹேங்கிங்' மற்றும் 'ஜிப் லைன் சைக்கிளிங்' நடக்கிறது.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆகாய தாமரையை அகற்றி, குளத்தை மேம்படுத்த எடுத்த முயற்சி பலன் தரவில்லை. குளத்தின் பெரும் பகுதியை ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளதாலும், கழிவுநீர் கலப்பதாலும் குளத்தின் நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது.
கொசுக்கள் அதிகரிப்பால் பறவைகளும் நுண்ணீர் வாழ் உயிரினங்களும் வாழும் பல்லுயிர் பெருக்க மண்டலம், மெல்ல அழிய துவங்கியுள்ளது.
