/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் ஆஜர்; 'பிடிவாரன்ட்' உத்தரவு ரத்து
/
பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் ஆஜர்; 'பிடிவாரன்ட்' உத்தரவு ரத்து
பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் ஆஜர்; 'பிடிவாரன்ட்' உத்தரவு ரத்து
பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் ஆஜர்; 'பிடிவாரன்ட்' உத்தரவு ரத்து
ADDED : நவ 13, 2024 06:41 AM
கோவை ; கோவை, காந்திபுரத்தை சேர்ந்தவர் ஏ.பி.முருகானந்தம்; பா.ஜ., மாநில பொதுச்செயலர். இவருக்கும், மதுக்கரையைச் சேர்ந்த சுந்தர்சாமி மகள் ஞானசவுந்தரிக்கும், 2009ல் திருமணம் நடந்தது. ஞானசவுந்தரி 2014ல் தற்கொலை செய்து கொண்டார்.
இதனால், திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த பொருட்களை, தங்களிடம் மீண்டும் ஒப்படைக்கக் கோரி சுந்தர்சாமி, கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில், முருகானந்தம் கோர்ட்டில் ஆஜராக தவறியதால், நேற்று முன்தினம் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. நேற்று கோர்ட்டில் ஆஜரானதால், பிடிவாரன்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
முருகானந்தம் கூறியதாவது:
மனைவி தற்கொலை வழக்கிற்கும், பிடிவாரன்ட்டிற்கும் சம்பந்தம் இல்லை. எனக்கு, 1.5 ஏக்கர் நிலம், 60 சவரன் நகை, 10 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்ததாக காவல் நிலையத்தில் சுந்தர்சாமி புகார் அளித்தார். புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று முடிக்கப்பட்டது.
மீண்டும் அவர் ஐகோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். அங்கும், புகாரில் முகாந்திரம் இல்லை என்று போலீசார் அறிக்கை சமர்ப்பித்ததால், அந்த மனுவும் முடித்து வைக்கப்பட்டது. தனி நபர் வழக்கில் தான் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தற்போது அந்த உத்தரவும் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றார்.

