/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ.,விலும் கோஷ்டி பூசல் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
/
பா.ஜ.,விலும் கோஷ்டி பூசல் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
பா.ஜ.,விலும் கோஷ்டி பூசல் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
பா.ஜ.,விலும் கோஷ்டி பூசல் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு
ADDED : ஜன 22, 2025 10:55 PM

பொள்ளாச்சி, ; புதியதாக நியமிக்கப்பட்ட பா.ஜ., மாவட்ட தலைவருக்கு எதிராகவும், ஆதரவாகவும், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவராக கடந்த சில நாட்களுக்கு முன், சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதியில் சந்திரசேகருக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. எதிர்ப்பாக ஒட்டிய போஸ்டரில், 'அண்ணாமலையை தெற்கு மாவட்டத்துக்குள் வரவிடாமல் தடுத்த சந்திரசேகருக்கு மாவட்ட தலைவர் பதவியா?,' என்ற வாசகங்களுடன் பா.ஜ.,வை சேர்ந்த நடராஜன் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
உட்கட்சி தேர்தலில், முன்னாள் மாவட்ட தலைவர் வசந்தராஜனுக்கு பதவி வழங்கவில்லை. இவருக்கு நெருக்கமானவருக்கு பதவி வழங்கப்பட்டது. பதவி இல்லையென்றாலும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக, நெருக்கமானவருக்கு வசந்தராஜன் பதவி பெற்றுத்தந்ததாகவும், அதனால் அதிருப்தியடைந்தவர்கள், போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பா.ஜ., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் சந்திரசேகருக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் இருவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை கண்டு, மற்ற கட்சிகள் போன்று, பா.ஜ,,விலும் கோஷ்டி பூசல் தலைதுாக்கியுள்ளதை, உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.