UPDATED : நவ 24, 2026 10:08 PM
ADDED : நவ 24, 2026 10:08 PM

அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் கைது செய்யப்பட்டனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்தும், திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, த.வெ.க., அரசை கண்டித்து, அன்னூரில் பா.ஜ.,வினர் அன்னூர் கைகாட்டியில், கோவை – சத்தி தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
பா.ஜ., அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் ஜெயபால், விவசாய அணி மாவட்ட தலைவர் வெள்ளிங்கிரி உள்பட 25 பேர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 10 நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து எஸ்.ஐ., குரு கணேஷ் தலைமையிலான போலீசார் 25 பேரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
