ADDED : செப் 28, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்துார் : பா.ஜ., கோவை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஆலாந்துறை, செல்வபுரம், பேரூர் செட்டிபாளையம் ஆகிய 3 மண்டலங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாமல் இருந்தது. அம்மண்டலங்களுக்கு தலைவருக்கான தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது.
தற்போது, ஆலாந்துறை மண்டல தலைவராக பாஸ்கரன், செல்வபுரம் மண்டல தலைவராக ராஜா சிதம்பரம், பேரூர் செட்டிபாளையம் மண்டல தலைவராக ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய மண்டல தலைவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.