/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொகுதி பணி மேற்கொள்ள தி.மு.க.,வினர் இடையூறு' பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
/
'தொகுதி பணி மேற்கொள்ள தி.மு.க.,வினர் இடையூறு' பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
'தொகுதி பணி மேற்கொள்ள தி.மு.க.,வினர் இடையூறு' பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
'தொகுதி பணி மேற்கொள்ள தி.மு.க.,வினர் இடையூறு' பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி குற்றச்சாட்டு
ADDED : நவ 14, 2024 04:59 AM
கோவை: கோவை தெற்கு தொகுதியில் மேம்பாட்டு பணி மேற்கொள்வதற்கு தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் தொடர்ந்து இடையூறு செய்கின்றனர். என்று பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மக்களை நேரில் சந்தித்து குறை கேட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., நிதியிலிருந்து, பல்வேறு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தடை போடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.
உக்கடம் பகுதியில், 24 மணி நேர குடிநீர் ஏ.டி.எம்., அமைக்க அப்பகுதி கவுன்சிலர் இடையூறு செய்து வருவதால் அப்பணி தடைபட்டுள்ளது.
அதே போல் ராமநாதபுரம், 80 அடி சாலையில் குடிநீர் ஏ.டி.எம்., அமைக்கவும் இங்கு உள்ள கவுன்சிலரால் தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் பேசி பணிகளை மேற்கொள்வோம்.
கோவை தெற்கு தொகுதியில் மாநில அரசின் அனைத்து திட்டங்களையும் அமல்படுத்துவதில் முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால் எம்.எல்.ஏ.,மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யக் கூடிய பணிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தடையாக இருப்பது வருத்தமளிக்கிறது.
போலீசார் மீதும் அரசு அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த சூழலில் தற்போது டாக்டர்கள் மீது மருத்துவ பணியாளர்கள் மீது நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மருத்துவ சேவையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சி அடைந்த மாடல் என சொல்லும் இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் அரசு டாக்டர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதை அரசின் தோல்வியாக தான் பார்க்க முடியும்.
மருத்துவ உட்கட்டமைப்பில் தலைசிறந்த விளங்குகிறோம் எனக் கூறும் தமிழகத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்து உள்ளது. இந்த சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

