/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் தேர்வு
/
பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் தேர்வு
ADDED : ஜன 28, 2025 05:13 AM

அன்னுார் : அன்னுாரைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி கோவை வடக்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் பா.ஜ., கிளை நிர்வாகிகள் தேர்தல் கடந்த டிசம்பரில் நடந்தது. இதையடுத்து ஒன்றிய தலைவர் தேர்தல் நடைபெற்றது. மூன்றாவது கட்டமாக மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலூர் ஆகிய மூன்று தொகுதிகள் அடங்கிய, கோவை வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கட்சியின் மாவட்ட துணைத் தலைவரும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருமான மாரிமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி, மாவட்ட துணை தலைவர் விக்னேஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் மாரிமுத்து, 42. கோவை வடக்கு மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அன்னுார் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர். மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற மாரிமுத்துக்கு, மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதன்முறையாக, பா.ஜ., வில் கோவை புறநகர் மாவட்ட தலைவராக பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறி தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.