தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பா.ஜ.க. பண்பு பயிற்சி முகாம்: 2029 தேர்தலுக்கு ரெடியாகிறது

பா.ஜ.க. பண்பு பயிற்சி முகாம்: 2029 தேர்தலுக்கு ரெடியாகிறது

பா.ஜ.க. பண்பு பயிற்சி முகாம்: 2029 தேர்தலுக்கு ரெடியாகிறது


UPDATED : செப் 21, 2026 03:25 PM

ADDED : செப் 21, 2026 03:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 03:25 PM ADDED : செப் 21, 2026 03:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவக்கரை:கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், 2 நாள் பண்பு பயிற்சி முகாம், பொது செயலாளர் ரகுனாதன் தலைமையில் நவக்கரையில் நடந்தது.

பண்டிட் தீனதயாள் உபாத்யா மக்கள் பயிற்சி பேரியக்கம் - 2026 எனும் பெயரில் நடந்த இம்முகாமின் முதல் நாளில், கட்சியின் வரலாறு, கொள்கைகள் மற்றும் கருத்தியல், அமைப்பு நிர்வாகம், பூத் அளவிலான பணிகள், தேர்தல் மற்றும் களப்பணி, மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களை கையாளுதல், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, அமைப்பு விரிவாக்கம், மன் கீ பாத், நமோ ஆப் உள்ளிட்ட கட்சி சார்ந்த டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டன.

இரண்டாம் நாளில் இலக்கு 2029, விவித சேத்திரம், ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு மற்றும் கிளை அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த விரிவுரை நடந்தது. விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், ஐ.டி. பிரிவு செயலாளர் அருள், கோவை வடக்கு தலைவர் மாரிமுத்து, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் சீனிவாசன், தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி மற்றும், 10 பெண் நிர்வாகிகள் உள்பட 80 பேர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us