/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விசைத்தறி அமைப்பினருடன் பா.ஜ., மாநில தலைவர் சந்திப்பு
/
விசைத்தறி அமைப்பினருடன் பா.ஜ., மாநில தலைவர் சந்திப்பு
விசைத்தறி அமைப்பினருடன் பா.ஜ., மாநில தலைவர் சந்திப்பு
விசைத்தறி அமைப்பினருடன் பா.ஜ., மாநில தலைவர் சந்திப்பு
ADDED : நவ 05, 2025 10:11 PM
சோமனூர்: விசைத்தறி ஜவுளி தொழில் சார்ந்த அமைப்பினரை,பா.ஜ., மாநில தலைவர் சோமனூரில் இன்று சந்தித்து பேசுகிறார்.
பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, விவசாயிகள், தொழில்துறையினர், தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, சோமனூர் அடுத்த தொட்டிபாளையம் கணபதி மஹாலில், காலை, 10:30 மணிக்கு, விசைத்தறி ஜவுளி தொழில் சார்ந்த அமைப்பினரை சந்தித்து பேசுகிறார்.
விசைத்தறி ஜவுளி தொழில் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெறுகிறார். தொழில் துறையினரினருடன் ஆலோசனை செய்ய உள்ளார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, சூலூர் சட்டசபை தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் செய்துள்ளனர்.