/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குவாரி ஆபீஸ் அருகே ரோட்டில் கருஞ்சிறுத்தை
/
குவாரி ஆபீஸ் அருகே ரோட்டில் கருஞ்சிறுத்தை
ADDED : ஜன 04, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: மதுக்கரை வனசரகத்திற்குட்பட்ட பாலக்காடு -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், குவாரி ஆபீஸ் - மைல்கல் இடையே, கோவைபுதூர், குளத்துபாளையம், அம்மாசை கவுண்டர் வீதியை சேர்ந்த சிவசாமி, 57 என்பவர், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது கருப்பு மர்ம விலங்கு ஒன்று, வாகனத்தில் மோதி ஓடியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த சிவசாமியை, அவ்வழியே வந்தோர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர். தகவலறிந்த வனத்துறையினர், அது கருஞ்சிறுத்தை என சந்தேகித்து, அப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தினர். வேட்டை தடுப்பு பிரிவினரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

