/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை
/
குண்டு வெடிப்பு எதிரொலி: தீவிர வாகன சோதனை
ADDED : நவ 11, 2025 10:20 PM

பொள்ளாச்சி: புதுடில்லியில் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, பொள்ளாச்சி பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
புதுடில்லி செங்கோட்டை அருகே, நேற்றுமுன்தினம் கார் குண்டு வெடித்து, 15 பேர் இறந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும், பொள்ளாச்சி வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படி வரும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

