ADDED : ஜூன் 26, 2026 11:16 PM
அ நிறம் | அளவு
கோவை: வேளாண் பல்கலையில், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடந்தது.
துணைவேந்தர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 192 பேர் ரத்த தானம் செய்தனர். இ.எஸ்.ஐ. ரத்த வங்கி தலைமை மருத்துவர் உமா சரோஜினி குழுவினர் முகாமை நடத்தினர்.
