/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் பிறந்த நாளில் ரத்த தானம், அன்னதானம்
/
பிரதமர் பிறந்த நாளில் ரத்த தானம், அன்னதானம்
ADDED : செப் 17, 2025 11:44 PM
கோவை; பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் நேற்று அதிகாலை சிறப்பு மலர் லட்சார்ச்சனை, குங்குமார்ச்சனை நடந்தது. ஈச்சனாரி விநாயகர் கோவிலில் பா.ஜ., தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன், தற்போதைய தலைவர் சந்திரசேகர் தலைமையில், சிறப்பு அர்ச்சனை நடந்தது.
தண்டுமாரியம்மன் கோவிலில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமையில், மோடி பெயரில், 1,008 முறை தொண்டர்கள் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
கோவை தெற்கு தொகுதி புலியகுளம் அந்தோணியார் மண்டபத்தில் மகளிருக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. ரத்த அழுத்தம், கண், பல், தோல், கர்ப்பப்பை, எலும்பு சிதைவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, ரத்த தான முகாம் நடந்தது.
புலியகுளம் அம்மன் குளம் பகுதியில், நேற்று மதியம் சிறப்பு அன்னதானம் பா.ஜ.,சார்பில் பரிமாறப்பட்டது. கோவை கோனியம்மன் கோவில், கெம்பட்டி காலனி தர்மராஜா, பெரிய கடை வீதி மாகாளியம்மன், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், மருதமலை சுப்ரமணிய சுவாமி, பி.என்.புதுார் கோதண்டராமர் கோவிலில், பிரதமர் மோடி பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
இனிப்பு, குளிர்பானங்களை பா.ஜ.,வினர் மக்களுக்கு வழங்கி, மோடியின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினர்.