‘ஸ்பேம் கால்’ ‘பாம் கால்’ ஆனது் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
‘ஸ்பேம் கால்’ ‘பாம் கால்’ ஆனது் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
UPDATED : நவ 12, 2026 07:10 PM
ADDED : நவ 12, 2026 07:04 PM

கோவை: கோவையை சேர்ந்த 45 வயது நபர் புதிதாக மொபைல் எண் வாங்கினார். அவரது எண்ணுக்கு தொடர் அழைப்புகள் வந்ததால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் அளிக்க அழைத்தார்.
தவறுதலாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, பதட்டத்தில், ‘ஸ்பேம் கால்’ வந்தது எனக் கூறுவதற்கு பதில் ‘பாம் கால்’ எனத் தெரிவித்தார். உடனடியாக அவரது அழைப்பு கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது.
விசாரணையில் அவர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில் இருப்பதாக கூறினார். மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் சென்று மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் சோதனை நடத்தினர்.
பஸ் ஸ்டாண்ட்டின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தினர். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவரை அழைத்து போனை வாங்கி சோதித்தனர். அவர் கூறியது போல், ஏராளமான ஸ்பேம் கால்கள் வந்திருந்ததை பார்த்தனர். தவறுதலாக பாம் கால் என அவர் கூறியது தெரிந்தது.
அவருக்கு போலீசார் அவருக்கு அறிவுரை வழங்கினர்.
