/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
/
கலெக்டர் அலுவலகத்துக்கு மீண்டும் குண்டு மிரட்டல்
ADDED : செப் 23, 2025 11:13 PM
கோவை; கடந்த சில வாரங்களாக, கோவை விமான நிலையம், கலெக்டர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பள்ளி, கல்லுாரிகளுக்கு இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அதை அலட்சியப்படுத்தாமல், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்றும் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்தது. ஊழியர்கள், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் நடத்திய, நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. இதேபோல், கோவை ரெட்பீல்ட்ஸில் உள்ள கப்பற்படை கணக்கு தணிக்கை பிரிவுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இதேபோல், இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதால், மிரட்டல் விடுக்கும் நபரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.