/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்களுக்கு மனஉளைச்சல்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் புகார்
/
வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்களுக்கு மனஉளைச்சல்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் புகார்
வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்களுக்கு மனஉளைச்சல்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் புகார்
வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்களுக்கு மனஉளைச்சல்; கலெக்டரின் நேர்முக உதவியாளர் புகார்
ADDED : செப் 04, 2025 11:15 PM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து, நான்கு முறை வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், சைபர் கிரைம் போலீசில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனி புகார் அளித்துள்ளார்.
கடந்த சில நாட்களில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நான்கு முறையும், நீதிமன்ற வளாகம், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்தன.
இதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதி (பொது), மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகார் விவரம்:
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக , aakash.bhaskaran@hotmail.com, bhagwanthmann@yandex.com, anil_subramanian@hotmail.com, ஆகிய இ-மெயில் வாயிலாக மிரட்டல் வந்துள்ளது. போலி ஐ.டி.,உருவாக்கி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த நபர் ஒருவர், கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பிய கடிதத்தில், 'வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் தொடர்பான தகவல் தனக்கு தெரியும் என்றும், இதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை' என்றும் கூறி இருந்தார். இது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும்.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதால் அலுவலக பணிகளுக்கு இடையூறாக இருக்கிறது.
ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பதற்றமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
போலி இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் தனியாக வழக்கு பதிந்து, மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.