/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி
/
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; மோப்ப நாய்களுக்கு தீவிர பயிற்சி
ADDED : செப் 03, 2025 11:19 PM

கோவை; கோவை கலெக்டர் அலுவலகம், விமான நிலையம், பாஸ்போர்ட் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம் ஆகிய அலுவலகங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருகின்றன.
மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு சிறப்பு பிரிவினர் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்வதால், மோப்ப நாய்களுக்கு, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது.
கோவை மாநகர மோப்ப நாய் பிரிவு சிறப்பு எஸ்.ஐ.அம்பலவாணன் கூறுகையில், ''கட்டடம், வாகனம், பூமிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 'அயன்', 'மலர்' என இரு மோப்பநாய்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன. அயன், 'லேபரடார்' வகையை சேர்ந்தது. மலர், 'ஜெர்மன் ஷெப்பர்டு' வகையை சேர்ந்தது.
இவ்விரு மோப்ப நாய்களும் தேர்ந்தவை. வாகனங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடிபொருட்களை கண்டறிவதற்கு, இவற்றுக்கு தீவிர பயிற்சி வழங்கப்படுகிறது,'' என்றார்.