UPDATED : நவ 28, 2026 05:00 PM
ADDED : நவ 28, 2026 05:00 PM

அ நிறம் | அளவு
கோவை: மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், மாவட்ட மைய நுாலகம் மற்றும் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் சார்பில், புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.
ஆர்.எஸ்.புரம் கவுலிபிவுன் ரோட்டில் உள்ள மைய நுாலக வளாகத்தில் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் கதை, கவிதை, கட்டுரை நுால்கள், சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கிய நுால்கள், சுயசரிதை, அரசியல் மற்றும் தன்னம்பிக்கை நுால்கள், அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்படும் வழிகாட்டி நுால்கள் இடம் பெற்றுள்ளன.
