/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்டத்தில் புத்தகம் வெளியீடு
/
இலக்கிய வட்டத்தில் புத்தகம் வெளியீடு
ADDED : ஜன 20, 2025 10:57 PM

பொள்ளாச்சி;;பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக கவியரங்கம் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தில், புத்தக வெளியீட்டு விழா, லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. அமைப்பு தலைவர் அம்சப்ரியா தலைமை, செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, 'படித்ததில் பிடித்தது' அமர்வில் மாணவர்களும், இளம் படைப்பாளிகளும் தங்கள் வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய 'உயிரச்சம்' சிறுகதைத் தொகுப்பை எழுத்தாளர் மணிவண்ணன் அறிமுகப்படுத்தினார்.இதேபோல, கவிஞர் ராஜா எழுதிய 'ஒரு லோடு மழை ஏற்றுபவன்' கவிதை புத்தகத்தை எழுத்தாளர் ரமேஷ்குமார் அறிமுகம் செய்தார்.
தவிர, கவிஞர் நெகிழன் எழுதிய 'வாகு', கவிஞர் நருன் எழுதிய 'தாகம் தீர்க்கும் மழை' ஆகிய புத்தகங்களும் வெளியிடப்பட்டன. பின், கவியரங்கம் நடத்தி, அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், எழுத்தாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.
நிகழ்வை இலக்கிய வட்ட நிர்வாகிகள் சோலைமாயவன், காளிமுத்து ஆகியோர் ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.